இரும்பு உலக்கை செக்கு Vs மர உலக்கை செக்கு

செக்கு என்பது எண்ணெய் வித்துக்களில் இருந்து எண்ணெய் எடுக்கும் ஒரு கருவி ஆகும்.  செக்கானது மரத்தாலோ கல்லாலோ செய்யப்பட்டிருக்கும்.

செக்கில் இடப்படும் எள்ளுடன் கருப்பட்டியை சேர்த்து சிறிதுசிறிதாக ஒரே வேகத்தில் மரத்திலான செக்குகளை சுழல வைப்பதன் மூலம் எள்ளில் இருந்து எண்ணெய் சிறிது சிறிதாக வெளியே வரும். மரச்செக்கிலிருந்து பிழியப்பட்டு வரும் எண்ணெயை பித்தளையால் ஆன பாத்திரத்தில் தான் வடித்தெடுப்பார்கள். அதுவும் குறிப்பாக இந்த எண்ணெயை எடுத்து ஊற்ற பயன்படும் பித்தளை பாத்திரமாக இருக்கும் .

இரும்பு உலக்கை செக்கு Vs மர உலக்கை செக்கு

பெரிய பெரிய எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்கள் பெரிய இரும்பு உலக்கைகளை கொண்டு எள்ளை ஆட்டி எண்ணெய்யை பிழிவார்கள். அப்போது கடுமையான வெப்பம் இந்த உலக்கை உருளைகளுக்கு இடையே ஏற்படுவதுண்டு. அந்த வெப்பத்தால் இயற்கையாகவே எண்ணெயில் மறைந்திருக்கும் சில  குணாம்சங்கள் குறைந்து போய்விடும்.

ஆனால் மரச்செக்கில் கருப்பட்டியுடன் சேர்த்து எள்ளை ஆட்டும் போது மரச்செக்கில் அவ்வளவாக வெப்பம் ஏறாது. அப்படியே ஏறும் குறைந்த வெப்பத்தையும் இந்த கருப்பட்டி சரி செய்து ஒரு வெப்ப சமமாக்கல் இயற்பியல் தத்துவத்தை அங்கே செயல்படுத்துகிறது.

இதனால் இப்படி மரச்செக்கில் ஆட்டி பிழிந்தெடுக்கப்படும் எண்ணெய்க்கு ஒரு அபாரமான மணமும், குணமும் இருக்கும்

http://www.inneram.com/articles/lifestyle/5769-back-to-czech-oil-mills.html